நெய்வேலி என்எல்சியில் ஏற்பட்ட விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு ஒரு தெளிவான நிலை கிடையாது என்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடைபெற்ற மோதல் தொடர்பாக ஒரு பிரதமர் உண்மையை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டியது ஒரு தார்மீக கடமை அந்த கடமை அவர் செய்ய வேண்டும் என்றார்.
நெய்வேலி என்எல்சியில் ஏற்பட்ட விபத்தில் நிறுவன அதிகாரிகளையும்,உயரதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் ஒரு முறை நிகழ்ந்த விபத்து இரண்டாவது முறையும் நிகழ்ந்தால் அதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.






