சனி, 5 செப்டம்பர், 2020

அரசு விரைவு போக்குவரத்து: முன்பதிவு செய்யும் பணி இன்று தொடங்கியது

 அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சேவையை வரும் 7ஆம் தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு ஆன் - லைன் மூலம் இன்று தொடங்கியுள்ளது. ஒரு பேருந்தில் 26 முதல் 32 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும், ஏசி விரைவு பேருந்துகள் தற்போது இயக்கப்படாது என்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது