புதன், 23 ஆகஸ்ட், 2017

நன்கொடை தர மறுத்த கடை ஊழியர்களை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்! August 22, 2017

நன்கொடை தர மறுத்த கடை ஊழியர்களை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்!


அரக்கோணம் அருகே துணிக்கடை ஒன்றில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நன்கொடை வழங்கவில்லை எனக் கூறி கடை ஊழியர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவனின் பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அவருடைய கட்சி தொண்டர்கள் சிலர் பொதுமக்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் நன்கொடையாக பணம் பிரித்துள்ளனர். அப்பொழுது அங்குள்ள துணிக்கடை ஒன்றிற்கு சென்று பணம் கேட்டுள்ளனர். அந்த கடையில் இருந்த வட மாநில ஊழியர்கள் பணம் தர முடியாது எனக் கூறியதால் அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கினர். 

இந்த சம்பவம் கடையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.