வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணை மிரட்டி பணம் பறித்த காவலர்! August 24, 2017

நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணை மிரட்டி பணம் பறித்த காவலர்!


ஜம்மு காஷ்மீரில் காவலர் ஒருவர் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்ணை மிரட்டி பணம் பறித்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பெண் நடைபாதை வியாபாரி ஒருவரிடம் சென்ற காவலர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் தம்மிடம் பணம் இல்லை என்று அந்த மூதாட்டி தெரிவித்த பிறகும் விடாமல் அவரை மிரட்டிய காவலர் அவரிடம் இருந்து பணம் பறித்து செல்கிறார்.

இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பலரின் கண்டனத்தை பெற்றுள்ளது.

இதனிடையே பலமுறை கெஞ்சியும் காவலர் தம்மிடம் மனிதாபிமனமே இல்லாமல் பணம் பறித்துச் சென்றதாக அந்த மூதாட்டியும் வேதனை தெரிவித்தார்.