இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பைக்கு அருகில் ஓடும் ஒரு ஆற்றின் அருகே சுற்றித்திரியும் நாய்கள் வெளிர் நீல நிறத்தில் காட்சியளிப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பைக்கு அருகில் உள்ள நவி மும்பையை ஒட்டி ஓடும் கசதி நதியில் 1000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதன் காரணமாக அந்த நதிக்கு அருகே வசிக்கும் தெரு நாய்கள் வெளிர் நீல நிறத்தில் மாறியுள்ளன. நவி மும்பை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பை நடத்தி வரும் ஆரத்தி சவுகான், இந்த அவலத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இவரே இதனை வெளியுலகிற்கு எடுத்துரைத்த முதல் நபர் ஆவார்.
இது தொடர்பாக ஆரத்தி சவுகானிடம் பேசிய போது, “நாய்கள் மட்டுமல்ல, இந்த மாசுபாடு காரணமாக இங்கு இரை தேடி வரும் பறவைகள் உள்ளிட்ட இதர விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார். 5 நாய்கள் வெளிர் நீல நிறத்தில் காட்சியளிக்கின்றன, அதில் ஒரு நாய்க்கு முழுமையாக கண் பார்வை பறிபோயுள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக தகவல்களை திரட்ட அந்த நதிக்கு அருகே சென்ற போது தனது கண்களில் கடும் எரிச்சல் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.(தற்போது அவரது உடல்நலம் தேறிவருவது ஆறுதல் தரும் செய்தி).
இந்த நதியில் கழிவுகளை கொட்டிவரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் காவலர்கள் தங்களுக்கு உடல்ரீதியான பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்றும், மூச்சு விடவே சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர், என்றாலும் வருமானத்திற்காக வேறு வழியில்லாமல் பணியில் தொடர்வதாகவும் கூறுவது வேதனையில் விளிம்பு.
இந்த நதிக்கு அருகில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், சாயத் தொழிற்சாலைகள், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் என 1000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சமீபத்தில் நவி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இந்த நதியின் நீரை பரிசோதித்த போது இந்த நதியில் கலந்துள்ள நச்சுகள் மிகவும் ஆபத்தானவை எனவும் பயோகெமிக்கல் ஆக்ஸிஜன் டிமாண்ட் (BOD) எனப்படும் நச்சுப்பொருள் மாதிரியின் அளவு லிட்டருக்கு 80 மில்லிகிராம் என்ற அளவில் இருப்பதாகவும் சோதனை முடிவுகள் வெளியாகின.
BOD-யின் அளவு லிட்டருக்கு 6 மிகி என்ற அளவில் இருந்தாலே அது மனிதப் பயண்பாட்டிற்கு ஏற்றதல்ல, இதே போல BOD-யின் அளவு லிட்டருக்கு 3 மிகி என்ற அளவில் இருந்தாலே, நதியில் வாழும் மீன்கள் இறந்துவிடும் என்ற நிலையில் 80மிமீ/லி என்பது எந்தளாவுக்கு ஆபத்து என்பதை கற்பனைக்கும் எட்டாத வகையில் உள்ளது.
மகராஷ்டிரா மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இது தொடர்பாக ஆரத்தி சவுகா புகார் அளித்ததன் அடிப்படையில், நதியில் ஆபத்தான நச்சுக்கழிவுகளை கொட்டிய ஒரு தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர் அதிகாரிகள்.
ஆயினும் தொழிற்சாலையின் ஒரு பகுதிக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும், தயாரிப்பு யூனிட் இன்னும் இயங்கி வருகிறது என்றும் ஆரத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மொத்தமும் அதிகாரிகளின் கண்துடைப்பு நடவடிக்கையே, ஒரு தொழிற்சாலை மட்டுமா இந்த பகுதியை மாசுபடுத்துகிறது?, நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தங்களின் கழிவுநீர் உள்ளிட்ட குப்பையை சுத்தீகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் கையூட்டு கொடுத்து சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளன என வேதனை தெரிவித்தார்.
மும்பையில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை என்பது ஒட்டுமொத்த தேசத்தில் நதிகளுக்கு ஏற்பட்டு வரும் சீரழிவுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே,
தமிழகத்தில் வற்றாத ஜீவ நதிகளாக ஓடிவந்த தாமிரபரணி, காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை உள்ளிட்ட நதிகளின் இன்றைய நிலையை காணுபவர்களுக்கு நாம் மேலே கூறும் கூற்றின் தீவிரம் விளங்கும்.
வருடம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த நதிகளில் இன்று பெயரளவுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ, சிறிதளவில் தண்ணீர் வருகிறது இப்படியே சென்றால் நாளடைவில் நதிகளும் அரசுகளாலும் தனியார்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப்படும் என்பது நாம் கண்கூடாக பார்க்கப்போகும் கூற்று தான்.
அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல இந்த அவல நிலைக்கு தனிப்பட்ட ஒவ்வொரு நபர்களுக்கும் பொறுப்பு உண்டு என்பது தவிர்க்கமுடியாத உண்மையாகும்.