கர்நாடக மாநிலம் மடிக்கேரியில் அரசு பேருந்துகள் மீது கல் வீசித் தாக்கப்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடகு மாவட்டத் தலைநகரான மடிக்கேரியில் அரசு பேருந்துகள் மீது சிலர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேருந்துகளின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதையடுத்து வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக மடிக்கேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கர்நாடகத்தின் குடகு, தார்வாட் மாவட்டங்களில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய பாஜகவினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திப்புசுல்தான் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக நடத்த பாஜகவினரும் இந்து அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இன்று விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குடகு மாவட்டம் மடிக்கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரைக் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டுசென்றனர்.
அதேபோல், தார்வாட் மாவட்டம் ஊப்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் குல்பர்க்காவிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.