திங்கள், 11 ஜூன், 2018

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் June 11, 2018

Image

பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் உள்ள தலா 2 தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு இரண்டு தாள்கள் வீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதால் ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்தில் இரு தாள்களில் இரு தேர்வுகள் எழுதுவதன் காரணமாக தேர்வு நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் தற்போது நடைமுறையில் உள்ள எட்டு தேர்வுகளுக்குப் பதிலாக ஆறு தேர்வுகளாக குறையும்பொழுது மாணவர்களின் மன அழுத்தம் பெரிதும் குறையும் என அரசு விளக்கமளித்துள்ளது. 

தமிழ், ஆங்கிலம் ஆகிய தாள்கள் இரு தேர்வுகளாக நடத்தப்படும்போது பாடப்பகுதிகளில் உள்ள எதனையும் நீக்காமல் அனைத்தும் ஒரே வினாத்தாளில் வரும்படி தயாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக பாடத்திட்ட குழுவிற்கு உயர்மட்ட குழுவின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts: