வெள்ளி, 8 ஜூன், 2018

மாதவிடாய் காலங்களில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்! June 8, 2018

Image


மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் காணப்படுவர். அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள தகுந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகள் குறித்த பட்டியல் உங்களுக்காக...

1. பீன்ஸ்:

பீன்ஸில் நார் சத்து அதிகமான அளவில் உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படுத்துவதை தடுக்கிறது.  பீன்ஸில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால் மாதவிடாய் காலங்களில் செரிமானக்கோளாறுகளை கட்டுப்படுத்தும். பீன்ஸ் அதிகமாக சாப்பிட்டு வாயுத்தொல்லை ஏற்பட்டால், குறைவான அளவில் பீன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. காய்கறிகள்:

கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் பச்சை காய்கறிகளில் அதிகமாக இருப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலிகளை கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், வைட்டமின் கே சத்து உள்ளதால் அதிக ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.

3.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:

மாதவிடாய் கால வலிகளை ஏற்படுத்துவது ப்ரோஸ்டாக்லாண்டின்ஸ் (prostaglandins) என்னும் பொருள். அதனால், ஒமேக 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள உணவுப்பொருட்களான சோயாபீன்ஸ், வாதுமை கொட்டை வகை போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்று வலி ஏற்படாமல் தடுக்கிறது.

4. அன்னாச்சிப்பழம்:

அன்னாச்சிப்பழங்களில் அதிகமான அளவு மாங்கனீஸ் (manganese) இருப்பதால், தசை இருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, மாதவிடாய் காலங்களில் அன்னாச்சிப்பழம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

5. தேநீர்:

பெண்கள் தேநீரை அதிகமான அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கூற்று இருக்கிறது. ஆனால், மாதவிடாய் காலங்களில் இஞ்சி டீ எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இஞ்சி டீ குடிப்பதால் மனசோர்வு, பதற்றம் போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

6. தண்ணீர்:

உதிரப்போக்கு காரணமாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்பொழுதும் சோர்வாக காணப்படுவர். அந்த சமயத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

7. முழு தானியங்கள்:

மூன்று வேலையும் சிறிதளவு கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், மூன்று வேலையும் சிறிதளவு முழு தானியங்கள் எடுத்துக்கொள்வது பெண்கள் இழந்த சக்தியை மீட்டுத்தர உதவுகிறது.

8. தயிர்:

தயிரில் அதிக அளவு சத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகிறது. மாதவிடாய் காலங்களில் தினமும் இரண்டு முறை தயிர் எடுத்துக்கொள்வதன்மூலம், வயிற்று வலியை கட்டுப்படுத்த முடியும்.