திங்கள், 4 ஜூன், 2018

​மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்! June 4, 2018

Image

சைக்கிள் பயன்பாட்டைக் அதிகாரிக்கும் விதமாகவும் ,சுற்றுசூழல் மாசைக் தடுக்கும் விதமாக மரத்திலான மிதிவண்டியை கோவை சேர்ந்த முருகேசன் என்பவர் வடிவமைத்துள்ளார். இது குறித்த ஒரு பிரத்யேக காட்சித் தொகுப்பைக் தற்போது பார்க்கலாம். 

பெருகி வரும் தேவைகளுக்கு ஏற்ப, நாளுக்கு நாள் மோட்டர் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதைபடிம எரிபொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் மிக மோசமாக மாசு அடைந்து வருகிறது.அரசும், தன்னார்வ அமைப்புகளும் சுற்றுசூழல் மாசடைவதைக் தடுக்க  பல்வேறு நடவடிக்களை எடுத்து வரும் நிலையில், இந்த முயற்சியில் தனது பங்களிப்பும்  இருக்க வேண்டும் என்று நினைத்த கோவையைக் சேர்ந்த இண்டீரியர் டிசைனரான முருகேசன் என்பவர், மரத்தால் ஆன சைக்கிளைக் வடிவமைத்துள்ளார். 

"சிட்டி பைக்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மர சைக்கிளில் பிளாஸ்டிக் கெமிக்கல் பூச்சைக் முற்றிலும் தவிர்த்துள்ளாதாக கூறுகிறார் முருகேசன். மேலும் இன்ஜினியரிங் வுட் என்று அழைக்கப்படும் பிளைவுட்டுகளைக் பயன்படுத்தி மர சைக்கிளைக் வடிவமைத்துள்ளாதாகவும் முருகேசன் தெரிவித்துள்ளார். இலகுவான எடையில் பயணத்திற்கு ஏற்றதாக, இந்த " சிட்டி பைக் " தயாரிப்பதற்காக செலவும் குறைவுதான் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் முருகேசன்.