13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, போலீஸ் சீருடையில் கருத்து தெரிவித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில் தூத்துக்குடியில் காற்றில் நச்சுத்தன்மை பரவுவுதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வெற்றிகரமாக நடந்துவந்த இந்த போராட்டத்தின் 100வது நாளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி வந்த சமயத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டது.
அச்சமயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீஸ் சீருடையில் சின்னத்திரை நடிகை நிலானி காவல்துறைக்கு எதிராகவும் மக்களுக்கு ஆதராகவும் கருத்து தெரிவித்தார். இதையடுத்து காவல்துறை அவரை கைது செய்ய தேடி வந்தது. கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை குன்னூரில் கைது செய்த வடபழனி போலீசார், அவரை சென்னை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.