Breaking News
Loading...
வியாழன், 14 ஜூன், 2018

Info Post
கோவையில் நடந்தது என்ன?மதக்கலவரம்_உருவாக்_முயற்சித்த
#பாஜக
#முறியடித்த_ என் தொப்புள் கொடி உறவுகள் .
#கொங்கு_இளைஞர்கள்!!*
கோவை எஸ்.என்.ஆர். அரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் ‘தொடர் போராட்டங்கள் அடிப்படை உரிமைகளுக் காகவா? அரசியல் காரணங்களுக்காகவா?’ என்ற தலைப்பில் வட்டமேஜை விவாத நிகழ்ச்சி 08.06.2018 மாலை நடந்தது.
_நிகழ்ச்சியில் நடைபெற்ற காரசா விவாதம் :_
*தமிழிசை* :
_தூத்துக்குடி போராட்டத்திற்கு சமூகவிரோதிகள்தான் காரணம்….. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கின்றனர். 24 வருடமாக இந்த ஸ்டெர்லைட் ஆலை இருக்கத்தானே செய்தது. அப்போது போராடாதவர்கள் இப்போது ஏன் இப்படி போராடுகிறார்கள்._
*தனியரசு* :
_ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய மக்கள் சமூக விரோதிகள் அல்ல. உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஊர்வலமாக சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்.. என்றார்…_ _*அரங்கமே அதிரும் அளவிற்கு பார்வையாளர்கள் அந்த கருத்தை வரவேற்றனர்...*_
*அப்போது குறுக்கிட்ட தமிழிசை ...*
_அதனை வன்மையாக கண்டிப்பதாக கூறி… ஏதோ பேச முயன்றார்.. அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓசை எழுப்பினர்…_
*தொடர்ந்த பேசிய தனியரசு...*
_நாங்க ஒன்னும் ஆட்சி அதிகாரத்துக்காக போராடல, சுத்தமான காத்து, நீர், சுகாதாரமான வாழ்க்கை வேணும்ன்னு தான் போராடுரோம்... வன்முறை வழியில போராடணும்ன்னு எங்களுக்கு விருப்பம் இல்ல,_
_எங்களுடைய அன்பு சகோதரி செங்கொடி ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தன்னைத் தானே மாய்த்துக்கொண்டாரே,_
_அது போன்று, உலகிலேயே யாருக்கும் இல்லாத அளவு இரக்க குணம் கொண்ட எங்களுடைய அன்பு தம்பி முத்துக்குமார் உலகமே வேடிக்கை பார்க்க அப்பாவி தமிழர்கள் மீதான படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீ க்கு இரை ஆகினானே அவனுடைய கோரிக்கை வென்றதா?_
_தமிழ்த்தாய் ஈன்றெடுத்த அறிவுக்குழந்தை அனிதா நீட்க்கு எதிராக தன்னை மாய்த்துக்கொண்டாரே அந்த கோரிக்கை வென்றதா?_
_தொடர்ந்து நாங்கள் அநீதிக்கு எதிராக போராடாமல் செங்கொடியை போல், முத்துக்குமாரை போல், அனிதாவை போல் தற்கொலை செய்து கொண்டே இருக்க வேண்டும்மா?_
_உலகிலேய அழகானவர், மென்மையானவர் என்று உங்களாலே சொல்லப்படும் ராமர் தோளிலே எதற்காக வில், அம்பு வைத்து உள்ளார். அந்த வில்லின் மூலம் அம்பை தொடுத்து அது வாலியின் நெஞ்சை பிளந்ததாக சொல்லப்படுகிறதே, அப்படியென்றால் ராமன் சமூக விரோதியா? முருகன் அசுரனை வதம் செய்தான் என்று சொல்கிறீர்களே! முருகன் சமூக விரோதியா?_
_போராடும் இன்றைய சமூக விரோதிகள்தான் நாளைய தலைவர்களாக வருவார்கள்.. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்.. என முடித்தார்.._
*அமீர்* :
_கருவறையில் இருக்கும் குழந்தை கூட போராடித்தான் வெளியே வருகிறது…. மக்கள் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள்.. ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை.. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.. அதுபோல ஆட்சியாளர்களும்..,_
உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்… ( அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.. ) அடுத்து ஏதோ அமீர் பேச முயன்ற போது அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தனர்…
நெறியாளர் :
பாஜகவினரை பார்த்து அமீர் பேசட்டும்.. அதற்கு அனுமதியுங்கள்.. அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார்… அவரும் பேசுவார் என கூறினார்..
அடுத்து *அமீர்* :
_கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன… போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன… அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே சென்றது.. என கேட்டு முடிக்கும் முன்_
அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர்… எங்களை பற்றி அமீர் பேசக்கூடாது என உடனே வேளியேற வேண்டும் என பாய்ந்தனர். அங்கிருந்து காவல்துறை மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்…
தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்… நெறியாளர் உங்கள் தரப்பு மாற்று கருத்தை கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் பொறுமையாக இருங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்..
ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை ஊத்தி மூட வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர்.
_அப்போது நெறியாளர் தமிழிசையை அழைத்து உங்கள் அமைப்பினரை அமைதி படுத்துங்கள் என கூறி கையில் மைக்கை கொடுத்தார்…_
ஆனால் தமிழிசை மிகத் தெளிவாக, இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தால் நம் மீது கருத்தியல் ரீதியான அடி பலமாக இருக்கும்.. அரங்கத்தில் இருந்ததில் சங்பரிவார் அமைப்புகளை தவிர்த்த அனைவரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுமையாக நடைபெற்று வெளிவந்தால்… *பாஜக இன்னும் அம்பலப்பட்டு விடும் என்ற நிலையில் சுதாரித்த தமிழிசை மைக்கை பிடித்து…. இந்த கருத்தை நாம் அனுமதிக்க முடியாது.. நாம் உயிரை இழந்திருக்கிறோம்.. யார் அதை பற்றி பேசினாலும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது என மேலும் வெறியை ஊட்டினார்..*
*_ஞானதேசிகன், கே.பி, டி.கே.எஸ் இளங்கோ உள்ளிட்டோர் சொல்லி பார்த்தனர் கேட்கவில்லை…_*
_ஏதோ திட்டத்துடன்தான் பாஜகவினர் இப்படி செய்கிறார்கள் என்று அரங்கில் இருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டு இருக்க, *கொதித்தெழுந்த கொங்கு இளைஞர்கள் உங்களுக்கு பிடித்தால் கேளுங்கள் இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என்றும், அமீருக்கு ஆதரவு தெரிவித்தும் கூச்சல் போட்டனர். இதனால் பா.ஜனதா- கொங்கு இளைஞர் பேரவையினருக்கு இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.* இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது._
*உடனே தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரை சொல்லி அழைத்து அமைதி காக்க வேண்டினார்.. அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது.*
உடனே மேடைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் நெறியாளரை தனியே அழைத்து உடனே நிகழ்ச்சியை முடியுங்கள்.. கலவரம் ஏற்பட்டு விடும்.. அனுமதிக்க முடியாது என கூறினர்.
இதற்கிடையில் கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர், மற்றும் அதிரடிப்படையினர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கேட்ட போது, எப்படியாவது அமீரை தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.. அதற்காகத்தான்.. என்றார் நம்மிடம்…
*நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் அமீர் அவர்களையும் கே.பாலகிருஷ்ணன் அவர்களையும் அழைத்துக்கொண்டு தனியரசு அவருடைய காரில் முன்னும் பின்னும் கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள் பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி சென்றார்...*
நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கலைந்து செல்லும்போது, திருப்பூரைச் சேர்ந்த கொங்கு இளைஞர் பேரவையினர் சிலர் நான்கு கார்களில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சூலூர் முதலிபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு தயாராக நின்றிருந்த பாஜகவினர் பத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு, அந்தக் காரில்தான் *"அமீர்" வருவதாக நினைத்து, காரை நிறுத்தி அரிவாள், கடப்பாறை, செங்கல் போன்றவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.*
இதில் கார் பலத்த சேதமடைந்தது. காரில் வந்தவர்கள் இறங்கியவுடன் அதில் அமீர் இல்லாததைக்கண்டதும் அந்தக் கும்பல் தப்பியோடியது. அதைத்தொடர்ந்து கொங்கு இளைஞர் பேரவையினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி பாஜகவை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றார்.
*_எப்படியாவது கொங்கு மண்ணில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை துண்டிவிட வேண்டும் என்று நினைத்த பாஜகவினரின் சதியை இந்துக்களே_ (கொங்கு இளைஞர்கள்) _முறியடித்தலால் கடும் ஆத்திரத்தில் செய்வதறியாது பாஜக, சங் பரிவார் கும்பல் திகைத்து நிற்கின்றனர்..._* இனி என் தமிழக தாய் மண்ணில் மதவொறியை வளரவிட மாட்டோம் அமைதியுடன்னும் ,அறிவுடனும் , சட்ட ஒழங்கை பாதுகாப்போம் BY. SULTHAN PDK