உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் மும்பை ஐஐடி 17 இடங்கள் முன்னேறி 162வது இடத்தை பிடித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த QUACQUARELLI SYMONDS கல்வி நிறுவனம் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் இருக்கும் வசதிகள், கற்பிக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மும்பையின் இந்திய தொழில்நுட்பக்கழகம் 17 இடங்கள் முன்னேறி 162வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கல்விக்கழகம் 20 இடங்கள் முன்னேறி 170வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 172வது இடத்தில் இருந்த டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் அதே இடத்தில் நீடிக்கிறது.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் MASSACHUSETTS கல்விக்கழகம் முதலிடத்திலும், ஸ்டான்போர்டு பல்லைக்கழகம், ஹார்வேர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் 9 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.