ஞாயிறு, 10 ஜூன், 2018

தமிழகத்தின் சில இடங்களில் கன மழை பெய்யும்! June 10, 2018

Image

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக  கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 190 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

வால்பாறையில் 170 மில்லி மீட்டரும், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 120 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .