புதன், 20 ஜூன், 2018

ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம் - மெஹ்பூபா முப்தி June 19, 2018

Image

ஜம்மு-காஷ்மீர் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்தோம், என முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின் பேட்டியளித்த, மெஹ்பூபா முப்தி தெரிவித்தார்.

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துவிட்டதாக கூறிய அவர், கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் கூறினார். மேலும், ரம்ஜான் மாதத்தில், எல்லையில் சண்டை நிறுத்தம் மேற்கொண்டது, ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்ப வழிவகுத்தது என்று குறிப்பிட்ட மெஹ்பூபா முப்தி, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தாங்கள் விரும்புகிறோம், என்றும் தெரிவித்தார். 

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நலனை முன்வைத்தே, பாஜகவுடன் கைகோர்த்தோம் என்று கூறிய மெஹ்பூபா முப்தி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Related Posts: