செவ்வாய், 12 ஜூன், 2018

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் நூதனப் போராட்டம்! June 12, 2018

Image

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறக்கப்படாததால், நாகை மாவட்ட விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். எனினும் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், தொடர்ந்து 7வது ஆண்டாக திட்டமிட்ட தேதியில் குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. 

இதனால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காவிரி கடைமடைப் பகுதிகளில் குறுவை சாகுபடி பொய்த்துப் போகும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீனம்பநல்லூர்   கிராமத்தில், கோட்டூறான் பாசன வாய்க்காலில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பெண்கள் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும் தங்களது அதிருப்தியை பதிவு செய்தனர்.