வெள்ளி, 8 ஜூன், 2018

மின்விளக்கை எரியவிட்டு தூங்குவது சரியா? June 7, 2018

சிலர், தூங்கும்பொழுது மின் விளக்கை அணைக்காமலோ அல்லது குறைவான வெளிச்சம் உள்ள மின்விளக்கை எரியவிட்டோ தூங்குவர். ஆனால், அப்படி செய்வது தூக்கத்திற்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Image

மின்விளக்கை அணைக்காமல் தூங்கினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்து 20 நபர்களிடம் ஆராய்ச்சி மேற்கொண்டது American Academy of Sleep Medicine என்னும் நிறுவனம். 18 முதல் 40 வயது மதிப்புள்ள ஆரோக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து, 3 பகல் மற்றும் இரண்டு இரவுகள் சோதனை நடத்தினர்.

அதன்மூலம், இரவு மின்விளக்கை அணைக்காமல் தூங்கும் நபர்களுக்கு இன்சுலின் சுரப்பதில் சில மாற்றங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது, இன்சுலின் குறைவான அளவில் சுரப்பதால் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்மூலம், இரவு தூங்கும்பொழுது செயற்கையாக ஏற்படும் ஒளி உடல்நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என தெரியவந்துள்ளது