மும்பைவாசிகள்தான் உலக அளவில் அதிக நேரம் உழைப்பதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்ற கேள்விக்கான பதில் என்ன ?
ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த வங்கி ஒன்று உலகளவில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பது குறித்த ஆய்வை நடத்தியது.
ஆண்டிற்கு 3 ஆயிரத்து 314 மணிநேரம் உழைக்கும் மும்பைவாசிகள் இந்த ஆய்வு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
மும்பைவாசிகள் எத்தனை மணிநேரம் உழைத்தாலும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் 54 மணிநேரம் வேலை பார்ப்பதால் கிடைக்கும் சம்பளத்தை கொண்டு ஒரு ஐபோன்-X மொபைல் வாங்கிவிடலாம் எனவும்,
ஆனால் மும்பையை சேர்ந்தவர்கள் ஐபோன்-X மொபைல் வாங்க 917 மணிநேரம் உழைக்க வேண்டும் எனவும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேலும், ஒரு மணிநேரத்தில் அதிக வருமானம் ஈட்டும் உலக நகரங்களின் பட்டியலில் மும்பை 76ஆவது இடத்தில் உள்ளது.