செவ்வாய், 5 ஜூன், 2018

“நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தின் விரோதி” : சீமான் June 5, 2018

Image

நீட் தேர்வில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் என்பது தெரிந்த ஒன்று என்றும், நீட் தேர்வு மருத்துவர்களை உருவாக்காது மாறாக மனநோயாளிகளை உருவாக்கும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்தார்.

காவேரி விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் கருத்து முதலில் இருந்து தொடங்க சொல்வதை போன்று இருப்பதாகவும், கர்நாடகாவோடு பேச்சுவார்த்தை நடத்துவது எவ்வித பயனையும் தராது என்றும் தெரிவித்தார். மேலும், கமலோடு பேசும் கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக முதல்வரை சந்திப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார். 

போராட்டம் நடத்துபவர்களை சமூக விரோதி என்று கூறும் நடிகர் ரஜினி தமிழ் சமூகத்தின் விரோதி என்று விமர்சனம் செய்த சீமான், தமிழர் நலனுக்காக எத்தனை போராட்டத்தை ரஜினி நடத்தியுள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார்.

படத்தை படமாக பார்க்க வேண்டும் என்றுக் கூறிய அவர், ஒரே தேசம் என்றால் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.