உலகளவில் பெரும் விற்பனை சந்தையாக திகழும் இந்தியாவை குறிவைத்து கூகுள் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றும் வகையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சேவைகளை தொடங்கியது. கூகுள் புதிய மேப் வசதி கடந்தாண்டு மே மாதம் தொடங்கியது
2017 செப்டம்பரில், கூகுள் டெஸ் டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலியும்,
வாடகை கார் பயன்பாட்டாளர்களுக்காக, ஓலா நிறுவனத்துடன் இணைந்து, புதிய சேவையையும் தொடங்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8 இந்திய மொழிகளில் வாய்ஸ் சர்ச் செயலியை அறிமுகம் செய்த கூகுள், யூடியூப் பாப் அப் பயன்பாட்டையும் கடந்தாண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான அம்சங்களுடன், கடந்தாண்டு டிசம்பரில் 2வீலர் மோட் மேப்-ஐ அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம், இந்தி மொழியில் பேசி கட்டளைகளை செயல்படுத்தும் நவீன வசதிகளுடன் கூடிய கூகுள் அஸிஸ்டென்ட் ஆப் கடந்த மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் சர்ச், ஆண்ட்ராய்டு இயங்கு தளங்களை இந்திய ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் 90 சதவீதம் பன்படுத்துகின்றனர்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் டெஸ்-ஐ 60 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர்
சராசரியாக ஒரு மாதத்தில் 22 கோடியே 50 லட்சம் பேர் யூடியூப் பக்கத்தை பார்வையிடுகின்றனர். கடந்த மார்ச் மாத காலகட்டத்தில் 80 சதவீதம் இந்தியர்கள் யூடியூப் பக்கத்தை பார்வையிடுகின்றனர்.
கூகுள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மேப் செயலியை ஆப்லைன் முறையிலும் பயன்படுத்தலாம். இந்தியாவில் இணைய அஞ்சல் அனுப்புவதற்கு பெரும்பாலோனோர் ஜி-மெயிலையே பயன்படுத்துகின்றனர்.
விளம்பரங்களுக்காக கூகுளை நாடுவது அதிகரித்துள்ளது. 2011ல் ஆயிரத்து 140 கோடியாக இருந்த டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தின் மதிப்பு, இந்தாண்டு 12 ஆயிரத்து 46 கோடியாக அதிகரித்துள்ளது.