ஞாயிறு, 3 ஜூன், 2018

காவலர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன? June 3, 2018

Image

முறையான பயிற்சி, ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்து அறிந்து கொண்டு பின் பணிக்கு வரும் காவலர்களின் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன?

சொந்த பிரச்னைகள், சக ஊழியர்களால் ஏற்படும் அழுத்தம், மனநல குறைபாடுகள் காரணமாகவும், நேரம் காலமின்றி தொடர்ச்சியான பணி, விடுமுறை மறுப்பு, மேலதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது. பணி அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் அதற்கேற்ற எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை என கூறப்படுகிறது

உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை, மன உளைச்சலுக்கு வடிகால் இல்லாத சூழல், தனிமனிதப் பகை, சமமற்ற பணிச்சுமை, மன ரீதியில் காயமடைவதற்கான தருணங்கள் என்றும்,  சிறப்பாக செயல்பட முடியாத சூழலில் மற்றவர்களால் இழிவாக பார்க்கப்படும் நிலையாலும் தற்கொலை செய்யும் நிலைக்கு காவலர்கள் தள்ளப்படுகின்றனர். 

குடும்பத்துடன் போதிய நேரம் செலவழிக்க முடியாத அளவிற்கு காவலர்களுக்கு கடுமையான பணிச்சுமை இருப்பதாலும், உடல்தகுதியுடன் இருக்க முடியாத நிலை, சமூகத்தில் களங்கமற்ற நற்பெயருடன் திகழ்வதற்காக போராட்டும் சூழல் இருப்பதாலும் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.