திங்கள், 18 ஜூன், 2018

தேனீ வளர்ப்பு

தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.
தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது.
தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், *மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம்.* தென்னந்தோப்புகளில், பத்து அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். இதன் மூலம் *30%* வரை விளைச்சலை அதிகப்படுத்தலாம் ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வேலைக்கார தேனீக்கள் இருக்கும்.
தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, இத்தாலிய தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக பிரிக்கலாம் என்றாலும் இந்திய தேனிக்கள்தான் பெட்டிகளில் வளர்க்க சிறந்தது.
ஒரு தேனீபெட்டியிலிருந்து வருடத்திற்கு *10 லிருந்து 15 கிலோ தேன்* கிடைக்கும். அனைத்து தரப்பு விவசாயிகளும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். இதன்மூலம் நல்ல லாபம் பெறலாம்.
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. நச்சுக் கலக்காத இயற்க்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று.
எனவே தேனீ வளர்ப்புக் கலையை நாம் கற்றுக்கொண்டால் மறைமுகமாக இயற்கை அன்னையை பாதுகாத்துக்கொள்கிறோம். எனவே துணிந்து தேனி வளர்ப்பு தொழிலைக் கற்றுக்கொண்டு உங்கள் பணத்தை அதில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது.
*தேனி பெட்டிகள் தேனீக்களுடன் மற்றும் சுத்தமான தேன் கிடைக்கும்.*
*மதுரம் இயற்கை தேன் பண்ணை*
*கோயம்புத்தூர்*
*9566610023*