மூளை கட்டி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜூன் 8ம் தேதி, உலக மூளை கட்டி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தற்பொழுது அனைவருடைய கைகளிலும் இன்றியமையாத ஒன்றாக அமைந்திருப்பது செல்போன். நூற்றுக்கணக்கான செயலிகளை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டு அனைத்துவிதமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பதற்கு செல்போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால், அனைத்து வயதினர் மத்தியிலும் செல்போன் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக பருவ வயதில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் செல்போன் பயன்படுத்துவதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடு மூளை கட்டி வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கும் மூளை கட்டி வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் ஆண்களை விட பெண்களுக்கே மூளை கட்டி அதிகமாக வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
தலையின் அளவு அதிகமாகுதல், உணவு உட்கொள்ள மறுத்தல், உடல் எடை குறைதல், எப்பொழுதும் சோர்வாக இருத்தல், அழுதுகொண்டே இருத்தல் இதுபோன்றவை, குழந்தைகளுக்கு மூளை கட்டி வருவதற்கான அறிகுறிகள். மேலும், மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சையுடன் சீரான உணவுப்பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் தங்கள் நோயை விரைவில் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.