வெள்ளி, 8 ஜூன், 2018

தமிழகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு! June 8, 2018

Image


தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் குறைந்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி தொடர்பாக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2016-17ம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரமாக இருந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2017-18 ஆம் ஆண்டில் 50 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 17 ஆயிரமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் தொழில் முதலீடும் கடந்த ஓராண்டில் 36 ஆயிரம் கோடியில் இருந்து 25 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 5 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது 2016-17 ஆம் ஆண்டில் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 இருந்த வேலைவாய்ப்பு 2017-18ம் நிதியாண்டில் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளதாகவும் தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: