புதன், 13 ஜூன், 2018

எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு! June 13, 2018

Image

பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரை போலீசார் தற்போது வரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், வரும் 20-ஆம் தேதி எஸ்.வி.சேகரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து அவையில் பேசுவது முறையல்ல என தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு முன்னதாக இந்த கேள்வியை எழுப்பி இருந்தால் விவாதித்திருக்கலாம் எனவும் சபாநாயகர் கூறினார். இதனை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Posts: