ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக முறையில் அனுமதிக்கப்பட்ட போராட்டங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் அடக்குமுறைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழக ஆளுநர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகள், வரம்புகளை மீறி தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறுவது போன்று கருதி கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக முத்தரசன் குற்றம்சாட்டினார்.
சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல முறை வலியுறுத்தியும், அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடிப்பது நல்லதல்ல எனவும் முத்தரசன் கூறினார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி விவசாயிகள் மேற்கொள்ள அரசு அனைத்து
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையம் கூடி
தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கவும் குறுவை, சம்பா சாகுபடிகள் தடையின்றி நடைபெற மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுநர் சட்டபடி தான் நடந்து கொள்கிறார் எதிர்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றன என்கிற முறையில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது என்றார்.
ஆளுநர் சட்டபடி தான் நடந்து கொள்கிறார் எதிர்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கின்றன என்கிற முறையில் ஆளுநர் மாளிகையின் அறிக்கை உள்ளது. அந்த அறிக்கை கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.