ஞாயிறு, 3 ஜூன், 2018

சமூக வலைதளங்களில் பேஸ்புக்கை விஞ்சிய யூடியூப்! June 3, 2018

Image

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கை விஞ்சி, இளம் இணைய தள பயன்பாட்டாளர்களின் வரவேற்பு பெற்றதாக யூடியூப் மாறியுள்ளதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இளைஞர்களின் சமூக வலைத்தள பயன்பாடு ஆய்வு செய்யும் PEW ஆராய்ச்சி மையம் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட அமெரிக்க இளைஞர்களிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டது. 

அதன்படி கடந்த 2014-15 கால கட்டத்தில் பதின்பருவத்தினரில் தொடர்ச்சியான இணைய பயன்பாடு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. 

சமுக வலைதளங்களால் நன்மை என 3ல் ஒருவரும், தீமையே என 4ல் ஒருவரும், இரண்டும் கலந்துள்ளதாக 2ல் ஒருவரும் தெரிவித்துள்ளனர். 

இதில் 85 சதவீதம் பேர் யூடியூபையும், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமை 72 சதவீதம் பேரும், ஸ்நாப் சாட்டை 69 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர்

கடந்த 2014-15 காலகட்டத்தில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் 71 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக குறைந்துள்ளனர். 

மக்களிடையே வரவேற்பு குறைந்து வரும் நிலையில், பேஸ்புக் ட்ரெண்டிங் நியூஸ் என்கிற அம்சத்தை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இளம் பருவத்தினரிடையே காணப்படும் அதீத சமுக வலைத்தள பயன்பாட்டு ஆர்வம் குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

குறிப்பாக பதின்பருவத்தை கூட எட்டாத குழந்தைகளுக்கான பேஸ்புக் மெஸஞ்சர் ஆப் உருவாக்கத்திற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Related Posts:

  • விமான விபத்து - இதோ சில உண்மைகள்!  திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.  _________________________________________… Read More
  • விரைவில் அடங்கும் காவி அராஜகம் விரைவில் அடங்கும்குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை கொலை வெறியில் தாக்கிய பாஜகவினரை வண்மையாக கண்டிக்கின்றோம்...இது தான் குஜராத்தின… Read More
  • திருக்குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் முரண்பட்டு நிற்கிறது. வஹியுடன் மோதும் மேலும் சில ஹதீஸ்கள். உயிரைக் கைப்பற்றும் வானவர் மூஸா நபியிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்ததும் மூஸா நபியவர்கள் அவரை அறைந்து விட்… Read More
  • Cricket பாகிஸ்தானுக்கு கைதட்டுவது தேசதுரோகமா?- சந்தி சிரிக்கும் தேசப்பற்று! உபியில் உள்ள விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் ‪#‎பாகிஸ்தான் கிரிக்கெட்… Read More
  • Be Care Read More