புதன், 13 ஜூன், 2018

யானைகள் மற்றும் மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! June 13, 2018

Image

மேகமலை வனச்சரகத்தில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தேனி மாவட்டம் மேகமலை வனஉயிரின கோட்டத்திற்குட்பட்ட வருசநாடு, மேகமலை வனச்சரக பகுதிகளில் வனவிலங்குகள் கணகெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பணியில் வனத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் என மொத்தம் 25 பேர் 3 குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளின் கால்தடம், எச்சங்கள், விலங்குகளின் ஒலி மற்றும் கண்ணால் பார்ப்பது போன்ற முறைகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போதைய கணக்கெடுப்பின்படி மேகமலை வனச்சரக பகுதிகளில் கடந்த ஆண்டை விட யானைகள் மற்றும் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதிகளவில் தனியார் எஸ்டேட்டுகள் அமைந்துள்ள வெள்ளி மலை வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதும் கண்டறியபட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.