வியாழன், 8 நவம்பர், 2018

​இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு! November 8, 2018

Image

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பான CMIE சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய காலகட்டத்தில் பணிச்சூழலின் தன்மை மாறியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலகட்டமான அக்டோபர் மாதத்தில் கடந்தாண்டு 40 கோடியே 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், நடப்பாண்டு அந்த எண்ணிக்கை 39 கோடியே 70 லட்சமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், கடந்தாண்டு அக்டோபரில் 2 கோடியே 16 லட்சமாக இருந்த வேலை தேடுவோர் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு கோடியே 20 லட்சம் பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இணைவதாகவும், அவர்களுக்கு பணி வழங்கும் அளவுக்கு வேலைவாய்ப்பு சந்தை விரிவடையவில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://ns7.tv/ta/tamil-news/india/8/11/2018/unemployment-rate-increased-india-survey-result

Related Posts: