ஞாயிறு, 4 நவம்பர், 2018

சிறுவயது கனவை நனவாக்க விமானத்தை உருவாக்கியுள்ள விவசாயி! November 3, 2018

Image

தன் சிறுவயது கனவை நெனவாக்க பயணிகள் விமானத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளார் சீனாவை சேர்ந்த பூண்டு விவசாயி சூ யே (Zhu Yue).

Airbus A320 என்ற விமானத்தின் மாதிரியை தன் நண்பர்கள் உதவியுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் உருவாக்கி வருகிறார் சூ. இவர் உருவாக்கிவரும் விமானம் 124 அடி நீளம், 118 அடி அகலம் மற்றும் 40 அடி உயரம் கொண்டது. தான் ஏறி இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாததால் அந்த விமான மாதிரியை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளார் சூ.

சிறுவயது முதலே தனக்கென்று சொந்த விமானத்தை வைத்திருக்கவேண்டும் என்ற கனவின் காரணமாகத்தான் இந்த விமானத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்த சூ, கட்டுமானப்பணிகள் விரைவில் முடிவடைந்துவிடும் எனவும் தெரிவித்தார். இந்த விமானத்தை கட்டுவதற்கு இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் சூ.