வெள்ளி, 9 நவம்பர், 2018

வந்துவிட்டது உலகின் முதல் I-Pad உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில்! November 8, 2018

Image

உலகில் முதல்முறையாக I-Pad உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் ஒன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் உள்ள Babeek என்ற குழந்தைகளுக்கான ஃபர்னிச்சர் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று ஐ-பேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான கட்டிலை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான Gary Taylor-ன் 9 மாத குழந்தையை தூங்க வைக்க அவர் சிரமம் அனுபவித்து வந்ததால், ஐ-பேட் உடன் கூடிய கட்டிலை தயாரிக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியன் விளைவாக இந்த கட்டில் தயாரித்ததாக Taylor கூறினார்.

இதனால் ஐ-பேடில் உள்ள வீடியோக்களை பார்த்தவாறே குழந்தை எளிதில் தூங்கிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கட்டிலின் விலை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயாகும்.

வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் குழந்தைகள் கூட மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின் தாக்கத்திற்கு ஆளாகிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் இது போன்ற கட்டிலை வடிவமைத்த Gary Taylor-ஐ சமூக வலைத்தளங்களில் பெற்றோர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது அளவிற்கு அதிகமான ஒன்று, பல்வேறு நிலைகளில் இது முற்றிலும் தவறான ஒன்று, உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது என்று Ana balem என்பவர் ஃபேஸ்புக்கில் கடுமையாக சாடியுள்ளார்.

இது கேலிக்கூத்தான செயல், உங்கள் குழந்தையை பாடி, படிக்கவைத்து, பேசிக்கொண்டு தூங்க வைப்பதில் என்ன தவறு என்று Danielle West என்பவர் கருத்து கூறியுள்ளார்.

என்ன தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டாலும் கூட குழந்தைகளுக்கு அதை கொண்டு செல்வதில் பெற்றோர்கள் கட்டுப்பாட்டுடனே இருந்து வருகின்றனர். இது போன்று குழந்தைகளை தூங்கும் படுக்கையிலேயே அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை இணைத்தால், குழந்தைப் பருவம் தொட்டே அவர்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.