அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பொருள் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருள் அவரது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அந்த பெட்டியை வீட்டு வாசலிலேயே வைத்துச்சென்றுவிட்டார் டெலிவரி செய்பவர்.
ஆர்டர் செய்யப்பட்ட பொருள் வீட்டு வாசலிலேயே வைக்கப்பட்டதை பார்த்த பக்கத்துவீட்டு பெண்மணி, அந்த பெட்டியை யாருக்கும் தெரியாமல் எடுத்து தன் வீட்டில் வைத்துள்ளார். பின்னர், பெட்டியை திறந்து பார்த்த பொழுது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டி முழுவதும் புழுக்களை பார்த்ததால் பயத்தில் வீட்டிற்கு வெளியே ஓடிச்சென்றுள்ளார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணிடம் விசாரித்த பொழுது தன் மகன் பியர்டட் டிராகன் எனப்படும் பல்லி வகையை சேர்ந்த உயிரினத்தை வளர்த்து வருவதாகவும் அதற்கு உணவாக கொடுப்பதற்காக ஆன்லைனில் புழுக்களை ஆர்டர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பெட்டியை திருடிய பெண்ணை நெட்டிசன்கள் பலவாறு விமர்சித்து வருகின்றனர்.