திருப்பூரில் தென்னை மரங்களில் எலி மற்றும் அணில்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தேங்காய்காளை பாதுகாக்க திருப்பூர் விவசாயி புதிய முறையை கையாண்டு வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பூர் மாணிக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயியான இவர், தென்னை தோட்டம் வைத்துள்ளார். அப்பகுதிகளில் எலி மற்றும் அணில்கள் தொல்லையால் தென்னை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் அதனை தடுக்க 2 அடி நீளமுள்ள அலுமினியத்தகடுகளை கொண்டு ஒவ்வொரு தென்னை மரத்திலும் குறிப்பிட்ட உயரத்தில் பாலசுப்பிரமணியம் அடித்துள்ளார்.
இதன்மூலம், மரத்தில் எலி மற்றும் அணில்களால் ஏற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அதன்பின் விளைச்சல் ஏதும் பாதிக்கவில்லை என தெரியவந்துள்ளது. எனவே, இதே நடைமுறையை பிற விவசாயிகளும் பின்பற்றினால் லாபம் ஈட்ட முடியும் என விவசாயி பாலசுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.