ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியாக உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்கல் சர்க்கிள் என்னும் இணையதளம் இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. எந்த ஆன்லைன் வணிக நிறுவனம் அதிக அளவில் போலியான பொருட்களை விற்பனை செய்கிறது என்ற கேள்விக்கு 37 சதவீதம் பேர் ஸ்நாப்டீல் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று அமேசான் அதிக அளவில் போலியான பொருட்களை விற்பனை செய்கிறது என்று 20 சதவீதம் பேரும் பிளிப்கார்ட் அதிக அளவில் போலியான பொருட்களை விற்பனை செய்கிறது என 22 சதவீதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி தகவல் ஆன்லைனில் பொருட்களை வாங்குவோரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது ஆன்லைனில் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.