பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்ற வருமான வரித்துறையின் அறிவிப்பு வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் அமலாகிறது.
பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர், அவரது தாயாரால் வளர்க்கப்படுபவராக இருந்தால், தந்தை பெயரை குறிப்பிடத் தயங்குவார்கள். எனவே, இதுபோன்ற அசவுகரியங்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இது, வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய நேர்முக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர் தாயால் வளர்க்கப்படுபவராக இருந்தால், அவர் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.