ஜிஎஸ்டி வரி விதிப்பால் மெத்தை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் என்பதால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ஓசூர் பகுதியில் தங்கி குறைந்தவிலையில் மெத்தை தயார் செய்து, விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், 500 ரூபாய் விற்க வேண்டிய மெத்தை, வரிவிதிப்பால், 800 ரூபாய்வரை விற்க வேண்டிய நிலை உள்ளதால், தொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் பெரும் தடங்கலாக மாறியதாகவும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். பெரும்சுமையாக உள்ள வாராக்கடன்களால் வங்களில் எவ்வித சீர்திருத்தமும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழ் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.