பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் அமெரிக்காவின் காலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, நல்ல யோசனை அல்ல என, மத்திய அரசுக்கு தான் கருத்து தெரிவித்தபோதிலும், அதனை சரியாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டதாக குறை கூறினார்.
சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் பெரும் தடங்கலாக மாறியதாகவும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டார். பெரும்சுமையாக உள்ள வாராக்கடன்களால் வங்களில் எவ்வித சீர்திருத்தமும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு கீழ் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.