வியாழன், 15 நவம்பர், 2018

75 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு! November 15, 2018

Image

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக்கொடியை பயன்படுத்திய 75வது ஆண்டு நினைவை கொண்டாடும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக்கொடியை முதன்முறையாக ஏற்றினார். அதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ள மத்திய அரசு அந்த நாணயத்தில் சுபாஷ் சந்திர போஸின் புகைப்படத்தையும் பொறிக்க முடிவு செய்துள்ளது.

35 கிராம் எடையுடன் உருவாக்கப்படவுள்ள இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு மற்றும் 10 சதவீதம் நிக்கல் மற்றும் Zinc-ஆல் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த நாணயத்தில் First Flag Hoisting Day என ஆங்கிலத்திலும் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.