செவ்வாய், 6 நவம்பர், 2018

தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி! November 5, 2018

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய தகவலை  மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும், என  தனியார் மருத்துவமனைகளுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவுரை வழங்கி உள்ளார். 

ஜவுளிக் கடைகள், தியேட்டர்கள் ஆகிய பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், தனியார் மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். பன்றிக் காய்ச்சல் குறித்த சிகிச்சை மற்றும் விதிமுறைகளை பின்பற்றி வருகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, காய்ச்சல் குறித்த தகவல்களை தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 
Image

Related Posts: