ஜார்கண்ட்டில் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில், பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியர் புத்தகப் பையோடு, வில் - அம்பையும் கொண்டு செல்கின்றனர்.
ஜார்கண்ட்டில் நக்ஸல்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மாணவர்கள் பள்ளி செல்வது மிகவும் சிரமமான ஒன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காடுகளைக் கடந்து பள்ளி செல்ல வேண்டிய நிலையில் உள்ள மாணவர்கள், அங்கே மறைந்திருக்கும் நக்ஸல்களால் தங்களுக்கு ஆபத்து நேராமல் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் வில் - அம்பையும் கொண்டு செல்கின்றனர்.
மாணவர்கள் வில் - அம்புடன் பள்ளிக்குச் செல்லும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாகவும், எனினும், வேறு வழியின்றியே அவர்கள் அவ்வாறு செல்வதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.