வெள்ளி, 9 நவம்பர், 2018

​வாட்ஸ் அப்பை போலவே ஃபேஸ்புக் மெசெஞ்சரிலும் வருகிறது Delete ஆப்ஷன்! November 8, 2018

ஏற்கெனவே அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிக்கும் வசதி வாட்ஸ் அப்பை தொடர்ந்து ஃபேஸ்புக் மெசெஞ்சரிலும் வரப்போகிறது.

உலகின் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ் அப். இது ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு அப்டேட்களை அந்நிறுவனம் புகுத்தி மெசேஜிங் அனுவத்தை புதிதுபடுத்தி வருகிறது.

இந்தவரிசையில் வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மார்ச்சில் Delete For Everyone என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.

இதன்படி தவறுதலாக அனுப்பிய மெசேஜை அனுப்பியவர் படிக்கும் முன்பாகவே நாம் அழித்து விடலாம். இந்த வசதி அறிமுகப்படுத்திய பின்னர் வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களுக்கு அது புதுமையான அனுபவமாக இருந்து வருகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக் மெசெஞ்சர் சேவையிலும் அதேபோன்ற ஒரு  வசதியை புகுத்த ஃபேஸ்புக் நிறுவனத்தார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் அப்ளிகேஷனில் வாட்ஸ் அப்பில் உள்ள  ‘Delete For Everyone’ ஆப்ஷனுக்கு போட்டியாக Unsend என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட இருக்கிறது.

இதன்படி விரைவில் வரவிருக்கும் 191.0 ஃபேஸ்புக் மெசெஞ்சர் அப்டேட்டில் இந்த ஆப்ஷன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீங்கள் தவறுதலாக அனுப்புக் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அழிக்கும் வசதியை இது தரப்போகிறது.

இருப்பினும் இந்த வசதியை தரவல்ல புதிய அப்டேட் எப்போது வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது.