வெள்ளி, 9 நவம்பர், 2018

மாநில கட்சிகளுடனான காங்கிரஸ் கூட்டணி நல்ல பலனை தந்துள்ளது : ப.சிதம்பரம்! November 9, 2018

Image

மாநில கட்சிகளுடனான காங்கிரஸ் கூட்டணி நல்ல பலனை தந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக மாநிலத்தில் மாநில கட்சியுடன் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணி நல்ல முடிவை தந்துள்ளது. 

என்றும், இதேபோல பிற மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார். மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என கூறினார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியவில்லை எனவும் அவர் விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி அனைத்து விஷயங்களிலும் தோற்றுவிட்டதாக கூறிய சிதம்பரம், பாரதிய ஜனதா மீண்டும் இந்துத்துவா கொள்கைக்கு சென்று விட்டதாக விமர்சித்தார்.

Related Posts: