வியாழன், 15 நவம்பர், 2018

​கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! November 15, 2018

Image

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று பிற்பகலில் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்  ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயல் காரணமாக, காரைக்குடி அழகப்பா உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தேர்வுகளும் கஜா புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட மத்திய பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.