ஞாயிறு, 11 நவம்பர், 2018

​தமிழகம் முழுவதும் இன்று TNPSC குரூப்-2 எழுத்துத்தேர்வு! November 11, 2018

Image

ஆயிரத்து 199 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC குரூப்-2 எழுத்துத் தேர்வு இன்று நடைபெறவுள்ளது.

சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, இந்த குரூப்-2 
தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னையில் மட்டும் 247 தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள TNPSC அதிகாரிகள், தேர்வு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Related Posts: