உதகையில் உறைபனிப் பொழிந்து வருவதால் அதிகாலை நேரங்களில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல புல்வெளிகள் காட்சி அளித்து வருகின்றன.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு புயல் மற்றும் தொடர் மழை பொய்து வந்ததால் பனிப்பொழிவு தாமதமானது. கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் நீர் பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில் தற்போது பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிரும் தொடர்ந்து நிலவுகிறது.
பனிப்பொழிவு காரணமாக இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் புள்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது. இனி வரும் நாட்களில் பனி பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. தற்போது குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.