புதன், 14 நவம்பர், 2018

மகாத்மா காந்தியின் புகழை சிதைக்கும் விதமாகவே படேலின் சிலை திறக்கப்பட்டுள்ளது : திருமாவளவன் November 14, 2018

Image

மகாத்மா காந்தியின் புகழை சிதைக்கும் விதமாகவே சர்தார் வல்லப்பாய் படேலின் சிலை திறக்கப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சியில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக பலமான கட்சி என்று பார்ப்பதைவிட அது ஆபத்தான கட்சியா என்பதுதான் கேள்வி என்றார். பாஜகவை இந்தியாவில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்றார். 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதுதான் தங்கள் நிலைபாடு என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். 

source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/14/11/2018/vck-chief-thirumavalavan-about-statue-unity

Related Posts: