புதன், 7 நவம்பர், 2018

வீடுகளில் கருப்பு கொடிகட்டி தீபாவளியை புறக்கணித்த கிராம மக்கள்! November 6, 2018

மதுரை அருகே, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், வீடுகளில் கருப்பு கொடிகட்டி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை புறக்கணித்தனர். 

ஊமச்சிகுளம் பகுதியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா, மின்சார இணைப்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி, தீபாவளி பண்டிகையை புறக்கணித்துள்ளதாக தெரிவித்தனர்.
Image

Related Posts: