வியாழன், 8 நவம்பர், 2018

டெல்லி காற்று மாசுபாடு குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல்! November 8, 2018

Image

டெல்லியில் மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் சுற்றுச்சூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருவதால் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. 

இதனால் டெல்லியில் காற்று மாசின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் காற்று மாசு 999 ஆகவும், மேஜர் தயான்சந்த் விளையாட்டு மைதானம் பகுதியில் காற்றின் மாசு 999 ஆகவும் உள்ளது.