பிரதமர் பதவியை மோடி தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்படுவதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்றம், புலனாய்வு அமைப்பான சிபிஐ போன்றவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த மன்மோகன் சிங், ஜனநாயகத்தை பலகீனப்படுத்தும் செயலில் மோடி அரசு திட்டமிட்டு செயல்படுவதாக குறை கூறினார்.
சட்டத்தின் ஆட்சி மீதே தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய மன்மோகன் சிங், தற்போதைய நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால், மோடி அரசை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது எனவும் கூறினார். ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பதாக சாடிய மன்மோகன், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும், நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.