ஞாயிறு, 4 நவம்பர், 2018

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுப்பாட்டால் முகமூடிகளின் விற்பனை அதிகரிப்பு! November 3, 2018

Image
புது டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாக முகமூடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. 

நாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் நாளுக்கு நாள் சுற்றுசூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருவதால் பலரக்கு மூச்சு தினறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்தவாறே இருக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடிலிருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் முகமூடி அணிந்த செல்ல தொடங்கியுள்ளன. சாலையிலும் வீடுகளிலும் பொதுமக்கள் முகமூடி அணியும் பழக்கம் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியில் முகமூடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.