ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) Jack Dorsey-ன் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் சிலர் ஹேக் செய்துள்ளது
சிஇஓ Jack Dorsey-ன் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியது குறித்து ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட Jack Dorsey-ன் கணக்கில் ஆச்சேபிக்கத்தக்க வகையிலான தகவல்களை ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர். இணப்பாகுபாடு குறித்த பதிவுகளைகளையும் அவர்கள் அதில் வெளியிட்டுள்ளனர். மேலும் ட்விட்டர் தலைமையிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு ட்வீட் செய்யப்பட்டிருந்தது. சுமார் 15 நிமிடங்களுக்கு இவ்வாறான தகவல்களை அந்த கணக்கில் பதிவிடப்பட்டு வந்துள்ளனர்.
ஹேக் செய்யப்பட்டது எப்படி?
இந்த ஹேக் விவகாரத்திற்கு Chuckling Squad என்ற ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.
Jack Dorsey-ன் ட்விட்டர் கணக்கில் உள்ள மொபைல் எண்ணை simswapping அல்லது "simjacking" என்ற முறையில் ஹேக் செய்த Chuckling Squad ஹேக்கர்கள் குழு இந்த சிம்மில் உள்ள தகவல்களை வேறொரு புதிய சிம்மிற்கு copy செய்து அதன் மூலம் அவரது ட்விட்டர் கணக்கினை எடுத்து மெசேஜ்கள் வாயிலாக இவ்வாறான தகவல்களை பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
credit ns7.tv